சனி, 13 ஜூன், 2009

சாலையோரக் கலைஞன்

சாலையோரக் கலைஞன்
-பற்குணன்

தனக்கு தேவையானதை வாங்க கொவ்ரவமாகவும், தன் வயிற்றைக் கழுவ வேண்டுமே என்று ஏதுமில்லாதவனாகவோ, தனக்கில்லாவிட்டாலும் தன் குழந்தைக்காவது கால்பங்கு இறைப்பை நிறம்ப வேண்டுமே என்றும், தான் எதற்காக இதை செய்கிறேன் என்றும், ஒரு வேளை நம் பரம்பரை தொழில் இதுதானோ என்றும் ஓடி விளையாடவேண்டிய குழ்ந்தை இப்படி ஓடி ஓடி மற்றவர் காலில் விழுவதையும் உள்ளத்தால் உணராவிட்டாலும் கண்களால் உண்ரும் திறன் கொண்டும் கண்டும் காணாமல் செல்வது கண்கூடே...

ஒரு வேளை அவர்கள் தனக்கு ஏதும் இல்லை , தன்னால் ஏதும் செய்ய இயலாததால், அவர்கள் கை கால் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் பிச்சை எடுக்கின்றனறே என்று சில உள்ளங்கள் மங்கும் போது அனைவரும் அப்படி அல்ல என மறுப்பு கூறுவது போல் தோற்றமளிக்கிறது அந்த ஓவியம். ஆம் பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளையும், பல வண்ணங்களையும் கொண்டு வரைந்த, வரையப்படும், வரையப்போகும் ஓவியங்களுக்கு தாய் போல் தோற்றமளிக்கிறது. உண்மைதான் ஒரு காலத்தில் சுவற்றில் வரைந்த புகழ்மிக்க எல்லோரா , அஜந்தா போன்ற குகை ஓவியங்களின் பரம்பரை தான் இந்த சாலை ஓவியம் என அந்த ஓவியம் மட்டுமல்ல் அந்த பிச்சைக்கார ஓவியர் இல்லை இல்லை கௌவ்ரவப்பிச்சை ஓவியரும் கூறுகிறார்...




ஓவியங்களை காட்சிப்படுத்தவும் , ஓவியர்களைப் பெறுமைப்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்குக்குள் அழகான பெரிய கூடம் பல தரப்பட்ட மக்கள் , தன்னால் மற்றவர்கள் போல் பணம் கொடுத்து அந்த ஓவியங்களை வாங்க முடியாது என்றாலும் அதைபார்த்து செல்லக்கூடியவர்களும் அடங்கியதாக காணப்பட்டது அந்த அறை. அவ்வளவு உயர்ந்த கலையாக கருதப்படும் வியக்கலை இன்று பணக்காரர்கள் மட்டுமே அல்ல்து தன் வீட்டை உயர்த்திக்காட்டும் என்பதற்காகவோ, ஒரு வகை வியாபாரமாகிவிட்ட‌தை எண்ணி வருந்திப் பயனில்லை. ஏனெனில் இன்று கலைகள் அனைத்தும் வியாபாரமாகிப்போய் விட்டது என்பது கண்கூடே காணக்கூடியது...









கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் பாதியைத் தாண்டியவரும் நரைத்த சடையுடனும் , அரை அடிக்கும் மேல் நீண்டு வளர்ந்து நரைத்த தாடியுடனும் சுத்தமானது என்று சொல்ல முடியதது போன்று கிழிந்த்து தெர்ந்தும் தெரியாமல் அதை உடுத்திக்கொண்டும், மொத்தத்தில் நானும் ஓர் சாதாரன பிச்சைக்காரன் என்று சொல்லாமல் சொல்வது அவரது தோற்றமும் தான்...

ஆனால் அவரது ஓவியம் அவ்வாறு இல்லை, ஒரு வேளை அதை அரங்குக்குள் காட்சிப் படுத்தியிருந்தால் அதனை வாங்க பலர் முன்வந்திருப்பார்களோ என்னவோ ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை காரணம் அறிந்ததே அவன் சதாரன பிச்சைக்காரனே ... அதன் காரணமாகவோ என்னவோ அந்த ஓவியத்தின் பெருமையை அதைக் கடந்து செல்பவர்களால் கூட உணரமுடியவில்லை. ஒருவேளை உணர்ந்தவர்களாக இருந்திருந்தால் அதை கண்டும் காணதவராய் , கண்டும் ஒரு ரூபாய் கூட போட மனமில்லாதவர்களாய் சென்றிருக்க‌ மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. இந்த் ஓவியங்களையும் ரசிக்கும் மனதையோ அல்லது அந்த பிச்சைக்காரனின் முகத்தைப் பார்த்தோ, அல்லது அவனைக்கண்டு வியந்தோ சிலர் சென்றிருப்பதை ஓவியத்தின் மீது சிதறியிருந்த சில்லரைகள் சொல்லியது...

னால், தன் மேல் சிதறியிருக்கும் சில்லரைகளை சேர்த்துப் பார்த்தால் சிலஇட்டிலிகளை வாங்கலாம் என்ற உணர்வை வெளிப்படுத்துவது போல் இருந்தது அவன் பார்வை. எப்படியாவது மதிய‌ உணவுக்கு வழி ஏற்பட்டால் சரி என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த ஓவியத்தை சாலையிலிருந்து கலைத்துவிட்டு செல்லுமாறு அங்கு வந்த கார்பரேஷன் வண்டியிலிருந்து ஒரு குரல் ஒலித்தது...

சரி இப்போது வேறு வழியில்லாமல் அதனை கலைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து பிச்சை தான் எடுக்கப்போகிறான் என்று என்னும் வேளையில் அவன் எழுந்து தனக்கே சொந்தமான ஒருசில மூட்டைகளை எடுத்துக்கொண்டு வேறொரு தெருவில் அமர்ந்து வேறு ஓவியத்தை சற்றும் சோர்வில்லாதவனாய் வரைய தொடங்கினான்.



அவனைப் பார்க்கும்போது தோன்றுவது ஒன்று மட்டுமே " இன்னும் கலை வாழ்கிறது சில தெருக்களில் "







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக