ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நாட்குறிப்பில்லாத‌வ‌னின் ப‌ய‌ண‌க்குறிப்பு

ந்த எதிர்பார்ப்புமில்லாமல் இந்த ஆண்டினை திளைக்க குடித்து வரவேற்றேன். குறைந்த விலையில் பாண்டியில் சரக்கு கிடைக்கும் என்பதாலோ அல்லது பிரெஞ்சு குடிமக்களுக்கு மத்தியில் குடித்து புத்தாண்டை வரவேற்கும் எண்ணமோ நண்பர்கள் அழைத்ததும் மறுக்கமல் அனைவரும் பாண்டியில் சங்கமித்து சளைக்க சளைக்க குடித்தோம். அங்கே ஒரு பாட்டில் பீரின் விலை ரூ.55, கள்ளத்தனமாக இரவு எந்த நேரத்தில் வாங்கினாலும் கூட ரூ.60 ஐத் தாண்டாது... ஆனால் நமது சென்னையில் இரவு 10.30 ஐத் தாண்டி ஒரு நிமிடம் கழித்தாலும் குவாட்டர் மாணிட்டர் 60 வதிலிருந்து 100 ஐத் தொட்டுவிடும் அபாயம் உள்ளது. ஆகவே குடிமக்களே கொஞ்சம் கவணம் தேவை..! எங்கு சென்றாலும் போலீசுக்கும் எனக்கும் நீங்காத சாபம் தொடருகிறது, இருந்தபோதிலும் அந்த ஊரின் வழிதெரியாத பல சந்துக்குள் புகுந்து தப்பித்து மீண்டு எங்களுடைய காரில் புகுந்துகொண்டோம்.(என்ன காரணம் என்று கேட்காதீர்கள் குடித்தவனுக்கு ஒன்றா இரண்டா காரணங்கள் அதுவும் போலீசிடம் அடிவாங்க...!)இப்படியாக பாண்டிச்சேரி சிறப்பு காவல்துறை எங்களை துரத்தி துரத்தி புத்தாண்டு வாழ்த்து சொல்லியது.

இப்படி கோலாகலமாக புத்தாண்டு கழித்து பல்கலைக்கழகம் வந்த நாள் எதிர்பார்க்கத சம்பவமொன்று நிகழக்காத்துக் கொண்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக இதழியல் மாணவர்கள் சென்னைப்பல்கலைக்கழக இதழியல் மாணவர்களாகிய எங்களுடன் இணைந்து ஒருவாரகால புத்தாக்கப் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதே அந்த எதிர்பாரத சம்பவம். அந்த ஒருவாரம் என் வாழ்வில் மிகமுக்கியமான காலகட்டம் மிகக்குறுகியதாக இருந்த போதிலும். அதன் முதல் கட்டமாக நாங்களும் அவர்களும் பேசிபழகி கருத்துபரிமாற்றம் நடக்க ஒரு சந்தர்ப்பம் உருவாக்கித்தரப்பட்டது. மெரினா கடற்கரை அன்று மாலை 6 மணிக்கு எங்கள் வருகைக்காக காத்திருந்தது. உப்புக்காற்றிற்கு சோகத்தைக் கரைக்கும் தன்மையும், மகிழ்ச்சியை ஏற்கும் தன்மையும் உள்ளதென நான் நம்புவதால் இந்த இரண்டு தருணங்களிலும் நான் அங்கே சென்றுவிடுவேன். துறைத்தலைவரும் எங்களை அங்கே அனுப்பியதும் எனக்கு சற்று நிம்மதியாகவே இருந்தது. நாங்கள் குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டோம். என்னுடைய குழுவில் பெண்கள் கொஞ்சம் கூட... எனக்கு அவர்கள் ஒன்றை தெளிவாக உனர்த்திவிட்டனர் அதாவது கடலில் கால் நனைக்க வேண்டும் அதன் பிறகே சுண்டல், மாங்காய்பத்தை என அனைத்தையும் திண்ண வேண்டுமென்று...! நல்ல வேளையாக என்னோடு வந்த என்வகுப்புத் தோழன் அவர்களுடன் நெருக்கமாகிவிட்டான். பெண்களை சமாளிப்பதற்காகவே பிறந்தவன் அவன்..! எல்லாம் முடிந்து நாங்கள் வட்டமாக மணற்பரப்பில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருக்கையில்(!) யாழ் நண்பன்சினிமா நட்சத்திர உருவங்களோடு புகைப்படமெடுக்குமிடத்தில், அவற்றைப்போலவே திருமாவளவனின் அட்டையும் இருப்பதைக்கண்டுவிட்டான் போலும் உடனே அதனோடு படமெடுக்க வேண்டுமென்றான்.. அவனைக் கட்டுப்படுத்தி மணலில் புதைக்காத குறையாக் குறைபட்டுக்கொண்டேன்... பிறகு முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவரது அரசியல் சாதுர்யத்தை எடுத்துக் கூறிய பின்னாளில் புரட்சிவீரன், மாவீரன் என்ற அவரது உருவமிட்ட பதாகைகளைக் கண்டதும் மண்ணாங்கட்டி, மயிராண்டி(சில வார்த்தைகள் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது) என்றெல்லாம் கூறி அவரது உண்மையான அடைமொழிகளை எங்கிருந்தோ கற்றிருந்தான். தலித்களின் தலைவன் என அவரை இனியும் யாரேனும் சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டால் கவலை கொள்ளாதீர்கள் மலம் அள்ளும் தொழில் உங்களுக்கு நிச்சயமாக்கித் தரப்படும்..

அப்போது நான் அவ‌ர்க‌ளுடைய‌ போராட்ட‌ம் ப‌ற்றி முத‌லில் பேசுவ‌தாக‌ இல்லை ஆனால் அவ‌ர்க‌ள் அதைப்ப‌ற்றி பேச‌ விரும்பிய‌தால் ஆர‌ம்பித்தோம். க‌ள‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளைக்காட்டிலும் நான் ஒன்றும் அறிந்த‌வ‌ன் அல்ல‌. ஆனால் இங்குள்ள‌ சீமான்க‌ளும், தோழ‌ர்க‌ளும், த‌ம்பிமார்க‌ளும் அம்ம‌க்க‌ளை எதை நோக்கி இழுக்கின்ற‌ன‌ர்..? அல்ல‌து அவ‌ர்க‌ளுக்கு எதைப் பெற்றுத்த‌ர‌ போராடுகின்ற‌ன‌ர்..? என்ப‌து குறித்து அவ‌ர்க‌ள‌து சுய‌லாப‌ அர‌சிய‌ல் பற்றி பேசினேன். "த‌னி ஈழ‌ம் இது ஒன்றே வ‌ழி" என்று இன்றைய‌ சூழ‌லில் சொல்லிக்கொண்டு திரிவ‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ அயோக்ய‌த்த‌ன‌ம்? இவ‌ர்க‌ள‌து முர‌ட்டு வாத‌ம் யாரை ப‌லிக‌டாவாக்கிய‌து இனியும் யாரை ப‌லிகொடுக்க‌க் காத்திருக்கிற‌து? இதுதான் என்கேள்வி... அவ‌ர்க‌ளில் யாரும் இனி துப்பாக்கியேந்தி போராட‌ விருப்பம்கொள்ளாத‌வ‌ர்க‌ள். போர்க‌ள‌த்தை த‌க‌ர்த்து வாழ்க்கைக்கான‌ மாற்றுக்க‌ள‌த்தை தேடிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர்.

மேலும் ஷோபாச‌க்தியின் வ‌ரிக‌ள் உங்க‌ளை என்ன‌ செய்கின்ற‌ன‌ என்ற‌ கேள்வியிலிருந்து கொதித்துக்கொண்டு முளைத்தான் ந‌ண்ப‌னொருவ‌ன்.ஒருமையில் அவ‌ரை வ‌சைபாடி உங்க‌ளுக்கு மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றான்... எங்க‌ளால் எல்லைக‌ட‌ந்து பேச‌முடியாது அப்ப‌டி பேசினால் எங்க‌ளால் எல்லையை க‌ட‌க்க‌ முடியாது என்று சொன்னான்... பின்னாளில் நானும் அவ‌னும் பேசினோம் இர‌ண்டு வார்த்தைக‌ள் பேசிய‌தும் குறுக்கிட்ட‌வ‌ன் அன்றுமுத‌ல் இர‌வு ம‌ணி 2 ஐக் க‌ட‌ந்தும் பேசிக்கொண்டிருந்தோம்... அப்போதெல்லாம் நான் ஒன்றை அழுத்திக்கூறினேன் "நீ போராளியாக‌ இருந்த‌ வ‌ரையில் உன் சார்பு நிலைக்கொள்கைக‌ள் அத‌ன் போக்குக‌ள் ச‌ரியான‌தாக‌ இருக்க‌லாம் ஆனால் நாம் இப்போது ஊட‌க‌விய‌ளாள‌ன் என்ற‌ பொதுத்த‌ள‌த்தில் இருக்கின்றோம் ப‌க்க‌ சார்பை நாம் உடைக்க‌வேண்டிய‌ த‌ருண‌மிது, ந‌ம் ச‌மூக‌ம், ந‌ம் ம‌க்க‌ள், ந‌ம் இன‌ம், ந‌ம் மொழி என‌ நாம் த‌மிழ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் இய‌ங்கும் வ‌ரை இன‌வாத‌ம், மொழிவாத‌ம், என்று பிரிவின‌வாத‌ம் தொட‌ரும் ஆக‌ இவைய‌னைத்தையும் உடைத்து எல்லைய‌ற்ற‌ ம‌ன‌ப்பான்மையை உருவாக்க‌ வேண்டும் அது ந‌ம‌து பார்வையை உள‌க‌ளாவிய‌ ம‌க்க‌ள் குறித்தும் சிந்திக்க‌த் தோற்றும், உல‌க‌ அர‌சிய‌ல், உல‌க‌ இல‌க்கிய‌ம், உல‌க‌ சினிமா இவை உன்னை ப‌க்குவ‌ப்ப‌டுத்தும்" என்றேன் இப்போதும் அவ‌ன் குறுக்கிட்டான் ஆனால் எங்க‌ளுக்கு மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றான்... என‌க்கு வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து ஏனெனில் அவ‌ர்க‌ளை சிறு பிள்ளை முத‌ல் கிள்ளிக்கிள்ளி வ‌ள‌ர்த்திருக்கிற‌து அவ‌ர்க‌ள‌து வ‌ர‌லாற்றுப் புத்த‌க‌ம்... ந‌ம்முடைய‌து த‌ட‌விக்கொடுக்கும் வ‌ர‌லாறென்றால் அவ‌ர்க‌ளுடைய‌து கிள்ளிவிடும் வ‌ர‌லாறாக‌ இருக்கிற‌து...

எந்த‌வொரு எல்லையில் நிற்கும் போர்வீர‌னும் த‌ன் நாட்டில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் குறித்து எண்ணுவ‌தில்லை அப்ப‌டி நினைத்தால் அவ‌னால் போர்க‌ள‌த்தில் நிற்க‌ முடியாது அது ம‌க்க‌ள் மேல் கொண்ட‌ ப‌ற்று அதை நாம் தேச‌ப்பற்று என்கிறோம் ஆக‌ அந்த‌ தேச‌ப்ப‌ற்று அவ‌னை அழுத்திப்பிடித்திருக்கிற‌து அவ‌ன் கொண்டுள்ள அந்த‌ தேச‌ப்ப‌ற்றுதான் இங்கிருக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளின் த‌வ‌றுக்கு கார‌ண‌மாக் அமைகிற‌து. ஆக‌ இந்த‌ இட‌த்தில் தேச‌ப்ப‌ற்றென்ப‌து கேள்விக்குள்ளாகிற‌து. எந்த‌வொரு இந்திய‌னும் பாகிஸ்தானியை க‌ண்ட‌ம‌த்திர‌த்திலேயே அடித்துவிட‌ப்போவ‌த்ல்லை அதேபோல் தான் அவ‌ர்க‌ளும் அப்ப‌டி ஒருபிர‌ச்ச‌னையும் ம‌க்க‌ளுக்குள் இல்லை ஆனால் விளையாட்டு என்று சொல்ல‌ப்ப‌ட்டாலும் கூட‌ அவ‌னை வீழ்த்திவிட‌ வேண்டுமென்று ந‌ம் உள்ள‌ம் ப‌ட‌பட‌க்கிற‌தே... ஆக‌ எவ்வ‌ள‌வு நுட்ப‌மாக‌ சிறு பிள்ளைக‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை ந‌ம‌து மூளை ம‌டிப்புக‌ளில் விளையாடுகின்ற‌து இந்த‌ தேச‌ப‌க்தி என்ற சொல்...!


இர‌ண்டுநாள் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் நிக‌ழ்ந்த‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ளில் பேசிய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள், பெய‌ர‌ள‌வில் ஞான‌த்தைக்கொண்ட‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌ த‌ங்க‌ள‌து இய‌லாமையை மேடையேற்றிச் சென்றுவிட்ட‌ன‌ர்... இந்த‌ பேச்சுக்க‌ளிலிருந்து நான் கொஞ்ச‌ம் ப‌ல‌மும், ப‌ல‌வீன‌மும் அடைந்தேன் என்ப‌தே உண்மை.ந‌ண்ப‌ன் ராஃபி அடிக்க‌டி சொல்வான் "இங்கே செழிப்பான‌ இத‌ழிய‌ளாள‌னாக‌ வாழ‌வும் வாய்ப்பிருக்கிற‌து வாய்ப்பேயில்லாம‌ல் அழிந்துபோக‌வும் வ‌ழியிருக்கிற‌து, நீ எதைத் தேர்ந்தெடுக்க‌ப்போகிறாய்" என்பான் உண்மையில் அவ‌ன் சொல்லும் க‌ணம் சாலையில் தென்ப‌டும் வாக‌ன‌ங்க‌ள் கூடுத‌ல் வேக‌த்தில் செல்வ‌துபோல் தோன்றும் என‌க்கு...! மாற்று ஊட‌க‌மான‌ இனைய‌த்தின்மீது ஞானிக்கு ந‌ம்பிக்கையில்லையாம் ஏனென்றால் அத‌னை எத்தைனைபேர் ப‌டிப்ப‌ர் அல்ல‌து எத்த‌னைபேரை சென்ற‌டையும் என்ப‌தில் இவ‌ர்க‌ளுக்கு ஒரே குழ‌ப்ப‌மாம்...! விக்கிலீக்ஸ் த‌ற்போது உல‌க‌த்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் மாற்று ஊட‌க‌ம்தானே? ஆக‌ நீங்க‌ள் மொட்டைமாடியில் வ‌டாம் போட்ட‌தையும், மிள‌காய் வ‌த்த‌ல் போட்ட‌தையும், இன்னாருக்கு ச‌லாம் போட்ட‌தையும் எழுதினால் அதையார் ப‌டிப்பார்க‌ள்(உங்க‌ளுடைய ச‌ந்தேக‌ம் ச‌ரியான‌து தான் ஆனாலும் இதைப்ப‌டிக்க‌வும் ஆள் இருக்கிற‌து ஐயா!!!) ராஜீவ் கொலைக்கு பிற‌கு புகலிக‌ளைப்ப‌ற்றியும் த‌மிழ்பிர‌ச்ச‌னை ப‌ற்றியும் பேசாத‌ நீங்க‌ள், இல‌ங்கை ச‌ர்வ‌தேச‌ திரை விழாவுக்கு த‌மிழ்த் திரையுல‌கு க‌ல‌ந்துகொள்ளாத‌த‌ற்கு ஏனைய்யா க‌டிந்துகொள்கிறீர்...? கேட்டால் ப‌த்திரிக்கையாள‌னுக்கு விம‌ர்ச‌ன‌ம் செய்யும் உரிமை உண்டு என‌து வாய்க்கு பூட்டு போடாதீர்க‌ள் என்பீர், ஆனால் நீங்க‌ளே ஒரு பூட்டை ம‌ட்டிக்கொண்டு அலைகிறீரே உங்க‌ளுக்காக‌ ம‌ட்டும் தானே அதைத் திற‌க்கிறீர்...

உப்பும் ச‌ப்புமான 2 நாள் ப‌யிற்சி முடிந்து 4 நாட்க‌ள் தென்த‌மிழ‌க‌ சுற்றுலாவை எங்க‌ள் துறை ஏற்பாடு செய்திருந்த‌து. ஆனால் செல்லும்முன், ப‌ய‌ண‌த்தின்போது வ‌ழியில் ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கோ அல்ல‌து உங்க‌ள் உயிருக்கோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் எவ்வித‌ பொறுப்பும் ஏற்காது என்ற உயிலினை எங்க‌ளிட‌மிருந்து பெற்றுக்கொண்டு அன்போடு வ‌ழிய‌னுப்பிய‌து..! அவையாவும் நான் இதுவ‌ரையிலும் சென்றிராத‌ ஊர்க‌ள் இருந்த‌ போதிலும் செல்லும் இட‌ங்க‌ள் மீது என‌க்கு கொஞ்ச‌மும் ஈடுபாடிருக்க‌வில்லை அவ‌ர்க‌ளோடு குறிப்பாக‌ அந்த‌ ந‌ண்ப‌னோடு பேச‌வேண்டும் என்ற‌ எண்ண‌மே முழுக்க‌ இருந்த‌து. நெடிய‌ ப‌ய‌ண‌ம் அது ஆனாலும் நாங்க‌ள் பேசிய‌தைவிட‌, ப‌கிர்ந்துகொண்ட‌தைவிட‌, புரிந்துகொண்ட‌தைவிட‌ ஒன்றும் நெடிய‌தாக‌த் தோன்ற‌வில்லை. வ‌லிக‌ள் நிறைந்த‌ அவ‌ன‌து வாழ்க்கையை கேட்ட‌தும் நானெல்லாம் அல்ல‌து நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்றே எண்ண‌த்தோன்றுகிற‌து. நான் ஒன்றைத் தெளிவாக‌ப் புரிந்துகொண்டேன், வ‌ந்திருந்த‌ அத்த‌னைபேரும் அவ‌ர்க‌ளுக்குள் இவ‌ன்தான் என் சிற‌ந்த‌ ந‌ண்ப‌ன் என்று சொல்லிக்கொண்டாலும் அதில் முழுமை இல்லை த‌ன்னிச்சையாக‌வே ஓர் வெற்றிட‌ம் புகுந்திருக்கிற‌து. மொழிரீதியாக‌ ஒன்றுப‌ட்டிருந்தாலும் பொருளாதார‌ம் அவ‌ர்க‌ளை  ஒன்றினைய‌விடுவ‌தில்லை... இதை என்னிட‌ம் அவ‌ன் சொல்கையில், என் விர‌லிடுக்கிலிருந்த‌ சிக‌ரெட்டுக்கு உத‌டுக‌ள் அழுத்த‌ம் ச‌ற்று அதிக‌ம் கொடுக்க‌, புகையின் அட‌ர்த்தியும் ச‌ற்றே அதிக‌மாக‌ வெளியேறிய‌து. அதைப்பிடுங்கி அவ‌னும் அவ்வாறே செய்தான். நான் புகைப்ப‌தால் என்னை வெறுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் இந்த‌க்க‌ண‌மே இதைப்ப‌டிக்கும் போதே வெறுத்துவிடுங்க‌ள் யாருக்காக‌வும் நான் நியாய‌ம் க‌ற்பிக்க‌ விரும்ப‌வில்லை. நான் குடித்துவிட்டு இர‌வு முழுக்க‌ சாலையோர‌த்தில் கிட‌ந்த‌வ‌ன் எந்த‌ வாச‌னைத் திர‌விய‌மும் என் இய‌ற்கை ம‌ண‌த்தை மாற்றிவிடாது...

அதே கோப‌த்தோடு ஒன்றை சொல்லி விடுகிறேன்... என்னோடு ப‌யிலும் யாழ்ப்பான‌ பெண்ணுக்கு அவ‌ள்ம‌ட்டுமே அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் ச‌ந்தித்த‌வ‌ள் அன்ற‌ நினைப்பும், வ‌ந்திருந்த‌ ம‌ற்ற‌ யாருக்கும் அவ்வ‌ள‌‌வு பாதிப்பு இல்லை என்ற‌ ம‌ன‌ப்பான்மை வேறூன்றி கிட‌க்கிற‌து. ப‌த்த‌டி தூர‌த்தில் பார்த்துவிட்டு இதை நான் சொல்ல‌வில்லை குறைந்த‌து ப‌த்து வார்த்தைக‌ள் பேசிய‌ பின்புதான் புரிந்துகொண்டு சொல்கிறேன். அந்த‌ ம‌க்க‌ளுக்குள்ளாக‌வே ஒரு புரித‌ல், ஒற்றுமை இல்லாத‌போது இந்தியாவிலிருக்கும் த‌மிழ‌ர்க‌ளால், ஊட‌க‌ங்க‌ளால் என்ன‌ பெரிதாக‌ பிடிங்கிவிட‌முடியும்?

மேலும் அவ‌ள், ப‌யிற்சிய‌ளிக்க‌ வ‌ந்த‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரிட‌மும், ஒரேரீதியான‌ கேள்வியையும் க‌ருத்தையும் முன்வை‌த்தாள் என்ன‌வெனில்,"நீங்க‌ள் ஏன் ஈழ‌ம் குறித்து உண்மையை எழுத‌வில்லை? நானாக‌ இருந்தால் உயிரைக்கொடுத்து எழுதியிருப்பேன், எழுதுவேன்" என்கிறாள்... ஒன்றை உடைத்து சொல்ல‌வேண்டுமென்றால், நானும் மேற்குறிப்பிட்ட‌ அந்த‌ ந‌ண்ப‌னும் பேசிய‌ பேச்சுக்க‌ளை அவ‌ன் க‌ட்டுரையாக‌ எழுதி அவ‌னது விரிவுரையாள‌ரிட‌ம்(பெய‌ர்சொல்ல‌ வேண்டிய‌தில்லை) கொடுத்த‌போது அத‌னை முழுவ‌தும் நிராக‌ரித்து, என்னைப்ப‌ற்றியும், நான் எங்கே பிற‌ந்தேன், எங்கே வ‌ள‌ர்ந்தேன், எங்கே க‌க்கா போனேன் என்றபாணியில் எழுதுமாறு சொல்லியிருக்கிறார்...! இப்போது நீ சொல் ப‌யிற்றுவிக்கும் ஆசிரிய‌ர்க‌ள் இவ்வாறு இருப்பின் அவ‌ன் என்ன‌ செய்ய‌... நீ சொல்கிறாய் நான் க‌ன‌டா சென்று என‌து அண்ண‌ன் ந‌ட‌த்தும் தொலைக்காட்சியில் நிக‌ழ்ச்சித் தொகுப்பாளியாக‌வோ அல்ல‌து செய்தி வாசிப்பாளியாக‌வோ ஆகியே தீருவேன் என்று... க‌வ‌லைப்ப‌டாதே நீ சொன்னாயே "என‌து உயிர் நீங்கினாலும் ப‌ர‌வாயில்லையென்று" நீ செய்ய‌ப்போகும் செய‌லில் அது ந‌ட‌க்காது..(புர‌ட்சிக்கான‌ தொலைக்காட்சிய‌ல்ல‌வே அது...!) உன‌க்காக‌ pizzaவும், burgerம் காத்திருக்கும் திண்றுவிட்டு pepsi குடித்துக்கொள்...

காலையில் எழுந்து ப‌ன்னையும், டீயையும் சிற்றுன்டியாக‌ முடித்து ம‌திய‌ சாப்பாட்டுக்கு என்ன‌ செய்யலாம் என்ற‌ நிலையிலும் ஈழ‌ச்சூழ‌லையும், இல‌ங்கை அர‌சையும் புனைவுப்பெய‌ரில் கிழித்துக்கொண்டிருப்ப‌வ‌ன் அவ‌ன் நினைவில் கொள். உண்மையான‌ பெய‌ரில் எழுதினால் கூட‌ இருப்ப‌வ‌னே காட்டிக்கொடுத்துவிடுவான் என்ப‌தையும், அந்த‌ எழுத்துக்க‌ள் அவ‌ன் ம‌திய‌சாப்பாட்டிற்கு கூட‌ வ‌ழிவ‌குப்ப‌தில்லை என்ப‌தையும் உயிரைக்கொடுக்க‌வும் துணிந்த‌ நீ புரிந்துகொள்...

கூட‌ப்பிற‌ந்த‌ அண்ண‌ன் போரில் உயிரிழ‌ந்த‌ த‌க‌வ‌ல் தெரிந்த்தும் அம்மா மூக்கில் ர‌த்த‌ம் வ‌ழிந்து ப‌டுத்த‌ ப‌டுக்கையாகிவிட்டாள். அப்பா ஆன்மீக‌த்தை ம‌ட்டுமே ந‌ம்பியிருக்கிறார்.அட‌க்க‌ம் செய்ய‌ ச‌வ‌ப்பெட்டி கிடைக்காம‌ல், உட‌லை ச‌ர‌த்தில் சுற்றி புதைத்துவிட்டு, பிழைப்போமா மாட்டோமா என்ற‌ நிலையில் உல‌க‌த்தின் புவிஈர்ப்பு விசையில் இன்னும் அவ‌ன் உட‌லும் உயிரும் ஒட்டிக்கொண்டிருக்கிற‌து. நாம் சுற்றுலாவில் இருக்கையில் அவ‌ன‌து அம்மா உட‌ல் நிலை மோச‌மாகி கொழும்புவிற்கு கொண்டுசெல்ல‌ப்ப‌ட்டிருந்தாள் எதையுமே வெளிக்காட்டாம‌ல் ந‌ம்மோடு சுற்றிக்கொண்டிருந்தான் அவ‌ன்...அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌னைப் வெறும‌னே பார்க்கையில் எந்த‌ப் பிர‌ச்ச‌னையுமில்லாத‌வ‌னாக‌த் தான் தோன்றும்... நான் எந்த‌ த‌ருண‌த்திலும் அவ‌னை நேர்காண‌ல்(!) செய்ய‌ நினைக்க‌வில்லை ஆனால் நீங்க‌ள் அத‌னை செவ்வ‌னே செய்து முடித்தீர்க‌ள்!!! அருமை...

உக்கிர‌மான‌ போர் சூழ‌லில் கொத்துக்குண்டால் கால்க‌ளை இழ‌ந்து உயிரோடு போராடிக்கொண்டிருந்த‌ பெண்ணின் மீது ஓலையைப்போட்டு தீயிட்டுக்கொளுத்தினேன் என்றான் அத‌ற்குமேல் என்னால் கேட்க‌ முடியாம‌ல் நிறுத்திவிட்டு என்னைய‌றியாம‌ல் அழுதுகொண்டிருந்தேன்.அப்போது ந‌ள்ளிர‌வு ம‌ணி ஒன்றைக் க‌ட‌ந்திருந்த‌து. அவ‌ன் நெஞ்சு வ‌லிக்கிற‌து என்று துடித்துக்கொண்டிருக்கையில் செய்வ‌த‌றியாம‌ல் திண‌றினின்றேன்.. நீங்க‌ள் அனைவ‌ரும் உங்க‌ள‌து ஆழ்ந்த‌ உர‌க்க‌த்தில் தோன்றிய‌ க‌ன‌வுக‌ளில் இருந்திருப்பீர்க‌ள்... எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌ன‌நிலையுடைய‌வ‌னாக‌ இருந்திருந்தால் நிம்ம‌தியை நோக்கி ஓர் உயிரை கொளுத்தியிருப்பான்??? எப்ப‌டிப்ப‌ட்ட‌ ஓர் நிலைமை இன்னும் அதை நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த‌ த‌ருண‌த்தில் நாங்க‌ள் இருவ‌ரும் அமைதியானோம். அமைதி நீடித்த‌து பேருந்து செல்லும் ஓசையைத்த‌விற‌ வேறொன்றுமில்லை.ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துக்கொண்டோம் புகைக்க‌த் தொட‌ங்கிவிட்டோம், புகை ம‌ண‌ம் அதிக‌ரித்த‌து ஜ‌ன்ன‌லை கொஞ்ச‌ம் திறந்துவிட்டேன் காற்று உள்ளே நுழைந்த‌து. இருவ‌ருக்குள்ளும்...


ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தலைப்பிடத் தெரியவில்லை...

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் ஒருவேளை அது குழப்பமாகக் கூட இருக்கலாம். பரவாயில்லை அது அப்படியே இருக்கட்டும். இப்போது உணவிற்காக ஏங்கவில்லை, நீரைத் தேடி அலையவில்லை பசித்தபோதும்கூட. பசி என்கிற வார்த்தையை எங்கோ கேட்ட ஞாபகம்.

செருப்பையே பார்த்திராத கால்கள் என்னைப் பார்க்கின்றன. என்னை எட்டி உதைக்க முற்படுகின்றன வெடிப்புற்ற, அழுக்கேறிய அந்தப் பாதங்கள்.கல், முள், மண், என அத்தனையையும் தாண்டி தார், சேர் என இத்தனையும் கடந்து வந்த அவை மேலும் எதையோ கடக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றது.அந்தக் கால்களால் அவன் நடக்கையில், அவன் தலையில் மிதித்து முன்னேறிச் செல்கின்றோம். ஏதோ ஒரு வகையில் நானும்தான். இதையும் எழுதிப்  பணமாக்க முயற்சிக்கிறேன் இலக்கியம் என்ற பெயரால், ஓவியம் என்ற பெயரால், கலை என்ற பெயரால்.

இன்னும் இலைகளில் பச்சை ஒட்டிக்கொண்டிருக்கிறது, மழை பெய்யும் போதே அதை காணமுடிகிறது மற்ற நேரங்களில் பழுப்பாக, அழுக்காக.காக்கைகள் எச்சமிடத் தயாராகவுள்ளன அதிலிருந்து தப்பிக்க நானும்.இன்னும் வண்டிகளில் மாட்டிக்கொள்ளாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றன சில குழந்தைகள் சாலையோரங்களில். கையில் கைமுறுக்கோடு, மூக்கில் வழியும் சளியோடு அதைத் துடைக்காமல், எந்தக் கவலையுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல்.அதற்கு யார் சொல்லிக்கொடுத்தது ஒரு ரூபாயைக் கேட்டுப்பெற..?

அப்போது நான் சிறுவன்.மதியம் பள்ளியில் சுண்டலைப் பெற்றேன், மாலை கடற்கரையில் சுண்டலை விற்றேன். இரயிலில் விற்பவனைவிட நான் சற்று வித்தியாசமானவன் நான் விற்கும் சுண்டலும் கூட. இங்கு பேருந்துகளில் இதெல்லாம் காணமுடியாது கூட்டத்தைத்தவிர, அவர்களுக்கிடையே ஏற்படும் கூச்சலைத்தவிர. நான் விற்பது பள்ளியில் தருவதைப்போல அல்ல, மிகவும் சுவையானது, சூடானது ஆனால் அங்கு இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது, ப‌ல நேரங்களில் சுண்டலைக்கூட.

நான் வேறெந்த‌ வித்தியாச‌த்தையும் காண‌வில்லை.காலையில் கையில் புத்த‌க‌ப்பை, மாலையில் சுண்ட‌ல் தூக்கு. தூக்க‌ச் சொல்லிய‌து அம்மா. ந‌ல்ல‌ அம்மா ப‌ல‌ருக்கு உழைக்கிறாள். அவ‌ளுக்காக‌வே நான் உழைக்கிறேன். நான் வ‌ருந்த‌வில்லை, வ‌ருத்த‌ம் என்ன‌வென்று என‌க்கு தெரியாது. இன்று விற்கும் சுண்ட‌லைப்போல் இருக்குமா, நேற்று விற்ற‌தைப்போல் இருக்குமா, அல்லது அதற்கு முந்தைய நாளைய‌தைப்போல் இருக்குமா...? தெரியாது.

ப‌ள்ளிக்கூட‌த்தை விட‌ இங்கு நான் அதிக‌ம் க‌ற்கிறேன், ம‌க்க‌ளை அவ‌ர்க‌ள‌து ம‌ன‌ங்க‌ளை.எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், என்ன‌ப்ப‌ற்றி விசாரிப்ப‌வ‌ர்க‌ள், என் சுண்ட‌ல‌ப்ப‌ற்றி விசாரிப்ப‌வ‌ர்க‌ள், விலைவாசியைப்ப‌ற்றி விசாரிப‌வ‌ர்க‌ள், மேலும் எதைப்பற்றியும் விசாரிக்காம‌ல், ஏதோ மன‌ விசார‌னைக்குள்ளிருப்ப‌வ‌ர்க‌ள் என‌ப்ப‌ல‌ வ‌கைக‌ளில்.இதோ க‌ரையோர‌த்தில் அங்கே சிறுவ‌ர்க‌ளைக் காண்கிறேன்.இப்போது நானும் அங்கிருக்கிறேன் அவ‌ர்க‌ளோடு. குதிக்கிறேன், விளையாடுகிறேன்.இறுதியாக‌ அப்பாவோடு குதித்த‌து, விளையாடிய‌து, இதோ நெடுநாள்க‌ழித்து இப்போது. ம‌ற்ற‌ சிறுவ‌ர்க‌ளைப்போல‌வே புத்தாடை உடுத்தியிருக்கிறேன், த‌லைக்கு எண்ணை வைத்திருக்கிறேன், கால‌ணிக‌ள் அணிந்திருக்கிறேன், என‌க்கே நான் புதிதாக‌த் தெரிகிறேன்.சுண்ட‌ல் தூக்கிற்கு ப‌தில் கையில் ப‌லூனைப் பிடித்திருக்கிறேன். இது பிடித்திருக்கிறது,  அதை  தூக்கிப்போட்டு விளையாடுகிறேன், காற்று ப‌ல‌மாக‌ வீசுகிற‌து, ப‌லூனைப் ப‌ற‌க்க‌விட்டுவிட்டேன். யாரும் அதைப் பிடிக்க‌வில்லை பொம்மைக‌ளாய் நிற்கின்ற‌ன‌ர். துர‌த்திக்கொண்டு ஓடுகிறேன் நான், க‌ரை நீள‌த்திற்கு. அந்த‌ பொம்மைக் கூட்ட‌த்திற்குள் புகுந்து ப‌லூனைத் தேடுகிறேன்.அதோ அது உருண்டோடுகிற‌து, விடாம‌ல் துர‌த்துகிறேன், கால்க‌ள் வ‌லிக்கின்ற‌ன‌, க‌ளைப்பாக‌ இருக்கிற‌து, இருந்த‌போதிலும் ஓடுகிறேன். நெருங்கிவிட்டேன், நெருங்கிவிட்டேன், ஆனால் ப‌லூன் வெடித்துவிட்ட‌து, என் க‌ன‌வும் கூட‌. சுண்ட‌லுக்காக‌ தோள்மீது கைவைத்து கனவைக் க‌லைத்தார் ஒரு பெரிய‌வ‌ர், கொடுத்துவிட்டு அவ‌ரைக் க‌ட‌ந்தேன் ஓரமாய்த் தேங்கியிருந்த‌ நீரின் ந‌டுவே.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நானுமல்ல நீயுமல்ல காரணம்


எதோசொல்ல நினைக்கிறேன் இங்கும‌ல்ல அங்குமல்ல ஆனால் எங்காவது.குழப்பம்தான் ஆனால் சாதாரனமானது அல்ல சற்றே கணமானது.அதை சுமக்க நினைக்கிறேன் நெடுதூரம் வரை பாதை மறையும் வரை.இருள் சூழும் வரை.தூக்கம் வரும் வரை ஆழ்ந்த தூக்கத்தை அடையும் வரை. உன்னைவிட தெளிவானவளை நான் காணவில்லை காணப்போவதுமில்லை காணவிருப்பமுமில்லை.பாதை விலக சில காலம்தான் உள்ளது விலகாத பிரியாத பாதை ஏதேனும் உண்டா? பதில் இல்லை பரவாயில்லை. சற்றே கணமான மண்வெட்டியைக் கொண்டு பாதையை உருவாக்குகிறேன்.அது நீளமானது, அகலமானது, என்னிலிருந்து உருவானது உனக்காக. எனவே அதுவே சிறந்தது எந்தப்பாதையையும் விட. நான் முட்களை அகற்றுகிறேன் மரங்களை அல்ல.மரங்கள் ஓங்கிவளர்ந்தவை விண்ணை முட்டுமளவு.இங்கு ஒளியில்லை அவைகளால் இருந்தபோதிலும் பரவாயில்லை உன் ஒளியில் நடக்கவே விரும்புகிறேன்.வழிநெடுக பட்டாம்பூச்சி, அவற்றின் வண்ணங்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை.அவை பறக்கின்றன திடீரென்று பூக்களிலிருந்து.சற்றே எதார்த்தமானதுதான் அனைவர்க்கும் ஆனால் எனக்கில்லை.அவைகளைப்பார்த்து நீயும் பற‌க்க நினைக்கிறாய் உன்னைப்பார்த்து நானும்.என்னிடம் சிறகுகள் இல்லை ஆனாலும் பறப்பேன் பெரிய இலைகளைக்கொண்டு.ஏனோ நீ பட்டாம்பூச்சியாகவே மறிவிட்டாய், இப்போது உன் வண்ணங்கள் என்னை ஏதோ செய்கின்றன. நீ பறந்தாய் நானும் பறந்தேன் எவ்வளவு தூரமென தெரியாது இல்லாத சிறகு இருப்பதாய் கொண்டு பறந்தேன்.என் சிறகு வலிக்கும்முன் உன் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டாய்.பலவண்ணங்கள் நீ மட்டும் தெளிவாகத் தெரிகிறாய் ஆம் மிகத் தெளிவாக.என் கண்ணாடியை கொஞ்சம் துடைக்கிறேன் கண்களையும் தான். நீ முன்பெப்போதையும் விட மகிழ்ச்சியாய் இருக்கிறாய்.உண்மைதானா? உண்மை எப்போதும் உண்மையல்ல.உன் சிறகு வலித்திருக்கும் காற்று அதை கிழித்திருக்கும்,சிறாய்த்திருக்கும்.உன்வலியை நான் உணர்கிறேன் முழுவதுமல்ல நீ சொல்லிய மட்டும். உணராத வரை வலி வலிதான் வார்த்தையளவில் உணர்ந்தால் அது வேதனை உள்ளுணர்வில். நாம் எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சொல்வதில்லை முழுமையாக, நாம் எதை எழுத நினைக்கிறோமோ அதை எழுதுவதில்லை முழுமையாக.


அகச்சிக்கல் அதன் முடிச்சைத் தேடுகிறேன் சிக்கலை அவிழ்க்க அல்ல அந்த சிக்கலை புரிந்துகொள்ள... முழுமையாக அதை உணரவே விரும்புகிறேன்.அதிலிருந்து விடுபட அல்ல.புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது எனது கானககத்திலும்.இங்கு மழை கொஞ்சம் அதிகம் வெயிலில்லை விடிந்தபொழுதும்.எப்படி முடிப்பதென்று தெரியவில்லை ஆனால் இதற்கு மேல் எழுதமுடியவில்லை.

சனி, 20 நவம்பர், 2010

குடிகார மிஷ்கினும், விபச்சாரி சாருவும்

தான் எடுத்துள்ள நந்தலாலா படம் தரமான படம் எனக்கருதுகிறாரா மிஷ்கின்...?


தினமணி இனயதளத்தில் வெளியாகியிருக்கும் அவரது கருத்தைப் படித்தவுடன் என்னசொல்வதென்று தெரியவில்லை.ஊருக்குதான் உபதேசம் என்பதுபோல் உள்ளது...

அவரது அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளார் என்று நண்பர் செந்தில் மூலம் அறிந்தேன்.உனக்கு குடிக்க தெரியுமா, புகைக்க தெரியுமா என உதவி இயக்குனராக சேர வருபவர்களிடம் கேட்க்கும் அவர் படிப்பதுண்டா, என்னென்ன படித்துள்ளீர் என்றும் கேட்பது வியப்பாக இருக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் இவர்களெல்லாம் தங்களது புத்திஜீவித்தனத்தை எப்படியெல்லாம் காட்டுகின்றனர் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

எனது ராம் திரைப்படத்தில் காதலே தேவையில்லை என்றபோதிலும் இந்த தமிழ்திரைச் சூழல் என்னை அவ்வாறு வைக்கச்செய்தது என்று இயக்குனர் அமீர் தனது கையாளாகாத்தனத்தை கூறுகிறார். இதுதான் இவர்களது பிரச்சனை அதாவது, இவர்களாகவே இவர்களை கலை இயக்குனர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவது. இந்த விஷயத்தைப் போட்டுடைத்திருப்பார் இயக்குனர் ராம்.அனைத்தும் வணிக ரீதியாகவே எடுக்கப்படுகின்றன என்றும் மேலும் சினிமா குறித்து அவரது பார்வையும் நிலைப்பையும் தெளிவுபடுத்தியிருப்பார் அதனை ஓர் தனிப் பதிவாக இடுவதே சிறப்பாக அமையும். அடுத்த பதிவில் அதை பதிக்கிறேன்.

புதன், 17 நவம்பர், 2010

இஸ்லாமிய மனித உரிமைகள்


1. உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:

இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) கூறினார்கள்:

(இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரை பறிக்கக் கூடாது.

முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.2. மனித மாண்பின் பாதுகாப்பு:

குர்ஆன் கூறுகிறது:

i. ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.

ii. அவதூறு கற்பிக்காதீர்

iii. பட்டப்பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்.

iV. புறங்கூறாதீர், தரக்குறைவாக பேசாதீர்.
3. தனிநபர் வாழ்வும் புனிதமும்:

1. உளவு பார்க்காதீர்

2. உரியவரின் அனுமதியின்றி ஒரு வரின் வீட்டுக்குள் நுழையாதீர்

சனி, 13 ஜூன், 2009

சாலையோரக் கலைஞன்

சாலையோரக் கலைஞன்
-பற்குணன்

தனக்கு தேவையானதை வாங்க கொவ்ரவமாகவும், தன் வயிற்றைக் கழுவ வேண்டுமே என்று ஏதுமில்லாதவனாகவோ, தனக்கில்லாவிட்டாலும் தன் குழந்தைக்காவது கால்பங்கு இறைப்பை நிறம்ப வேண்டுமே என்றும், தான் எதற்காக இதை செய்கிறேன் என்றும், ஒரு வேளை நம் பரம்பரை தொழில் இதுதானோ என்றும் ஓடி விளையாடவேண்டிய குழ்ந்தை இப்படி ஓடி ஓடி மற்றவர் காலில் விழுவதையும் உள்ளத்தால் உணராவிட்டாலும் கண்களால் உண்ரும் திறன் கொண்டும் கண்டும் காணாமல் செல்வது கண்கூடே...

ஒரு வேளை அவர்கள் தனக்கு ஏதும் இல்லை , தன்னால் ஏதும் செய்ய இயலாததால், அவர்கள் கை கால் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் பிச்சை எடுக்கின்றனறே என்று சில உள்ளங்கள் மங்கும் போது அனைவரும் அப்படி அல்ல என மறுப்பு கூறுவது போல் தோற்றமளிக்கிறது அந்த ஓவியம். ஆம் பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளையும், பல வண்ணங்களையும் கொண்டு வரைந்த, வரையப்படும், வரையப்போகும் ஓவியங்களுக்கு தாய் போல் தோற்றமளிக்கிறது. உண்மைதான் ஒரு காலத்தில் சுவற்றில் வரைந்த புகழ்மிக்க எல்லோரா , அஜந்தா போன்ற குகை ஓவியங்களின் பரம்பரை தான் இந்த சாலை ஓவியம் என அந்த ஓவியம் மட்டுமல்ல் அந்த பிச்சைக்கார ஓவியர் இல்லை இல்லை கௌவ்ரவப்பிச்சை ஓவியரும் கூறுகிறார்...
ஓவியங்களை காட்சிப்படுத்தவும் , ஓவியர்களைப் பெறுமைப்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்குக்குள் அழகான பெரிய கூடம் பல தரப்பட்ட மக்கள் , தன்னால் மற்றவர்கள் போல் பணம் கொடுத்து அந்த ஓவியங்களை வாங்க முடியாது என்றாலும் அதைபார்த்து செல்லக்கூடியவர்களும் அடங்கியதாக காணப்பட்டது அந்த அறை. அவ்வளவு உயர்ந்த கலையாக கருதப்படும் வியக்கலை இன்று பணக்காரர்கள் மட்டுமே அல்ல்து தன் வீட்டை உயர்த்திக்காட்டும் என்பதற்காகவோ, ஒரு வகை வியாபாரமாகிவிட்ட‌தை எண்ணி வருந்திப் பயனில்லை. ஏனெனில் இன்று கலைகள் அனைத்தும் வியாபாரமாகிப்போய் விட்டது என்பது கண்கூடே காணக்கூடியது...

சிந்தனைக்கு ஓர் கேள்வி
திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?


பதில்
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35
குறள் எண் : 341
குறள் : யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்