புதன், 17 நவம்பர், 2010

இஸ்லாமிய மனித உரிமைகள்


1. உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:

இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) கூறினார்கள்:

(இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரை பறிக்கக் கூடாது.

முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.



2. மனித மாண்பின் பாதுகாப்பு:

குர்ஆன் கூறுகிறது:

i. ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.

ii. அவதூறு கற்பிக்காதீர்

iii. பட்டப்பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்.

iV. புறங்கூறாதீர், தரக்குறைவாக பேசாதீர்.




3. தனிநபர் வாழ்வும் புனிதமும்:

1. உளவு பார்க்காதீர்

2. உரியவரின் அனுமதியின்றி ஒரு வரின் வீட்டுக்குள் நுழையாதீர்




4. தனிநபர் சுதந்திரம் :

எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் நிரூபணமா காதவரை, அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவரை சிறையிலடைக்கக் கூடாது. நீதி மன்றத்தில் ஒருவரைப்பாது காத்துக்கொள்ள வாய்ப்பளிக்காமல் சிறையிலடைக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.



5. கொடுங்கோண்மைக்கு எதிரான பாதுகாப்பு:

இஸ்லாம் வழங்கிய மனித உரிமைகளில் ஒன்று அரசுக் கொடுங்கோண் மைக் கெதிரான பாதுகாப்பாகும். குர்ஆன் கூறுகிறது: தீங்கான சொற்களை வெளிப்படையாக பேசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால் பாதிக் கப்பட்டவர் பேசலாம் (4:148)

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை. மனித னுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பிரநிதிக்குரிய அதிகாரமே! அடைக்கலமாக அளிக்கப்பட்ட அதிகாரமே ஆகும்.

இத்தகைய அதிகாரங்களைப் பெற்றவர், மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக காட்சியளிக்க வேண்டும். அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தி அபூபக்ர்(ரலி) அவர்கள் பதவியேற்ற பின் தம்மு டைய முதல் உரையில் கூறுகிறார்.

நான் நல்லது செய்தால் என்னோடு ஒத்துழையுங்கள். நான் தவறு செய்தால் என்னைத்திருத்துங்கள். இறைவனின்- இறைத்தூதரின் ஆணைகளை நான் நிறைவேற்றும் வரை எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் வழிதவறி நடந்தால் எனக்கு கீழ்ப்படிய வேண்டாம்.


6. கருத்துச் சுதந்திரம்:

குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இஸ்லாம் முழு உத் தரவாதமளிக்கிறது. ஆனால், ஒரு நிபந்தனை. ஒழுக்க மேம்பாட்டிற்கும், வாய்மைப் பரவுதலுக்கும் துணையாக அது அமைய வேண்டும். கொடுங் கோண்மை மற்றும் தீங்கு அதிகரிக் கலாகாது.

கருத்துச் சுதந்திரம் பற்றி மேலை நாட்டினர் கொண்டுள்ள கருத்தோட்டத்தை விட இஸ்லாம் அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் சிறப்பானது. எந்தக் கார ணத்தாலும் தீமைகள், அநியாயங்கள் பெருகுவதை இஸ்லாம் அனுமதிப் பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் பழி, தாக்குதல், அத்துமீறல்களை இஸ் லாம் அனுமதிப்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இறையாணை ஏதேனும் உள்ளதா என்று முஸ்லிம்கள் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை விசாரிப்பது வழக்கம். அப்படி இறைக்கட்டளை எதுவும் வெளியாகவில்லை என்று கூறினால், முஸ்லிம்கள் வெளிப்படையாக, மனம்விட்டு தத்தமது கருத்துக்களைக் கூறுவார்கள்.



7. கூடிவாழும் உரிமை

கட்சி, மன்றங்கள் அமைத்து மனிதர்கள் கூடி வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும். இந்த உரிமையும் ஒரு சில பொதுநல விதிகளுக்குட்பட்டே இருக்கவேண்டும்.



8. தீர்மானிக்கும் உரிமை

இஸ்லாம் கூறுகிறது; இறை மார்க்கத்தில் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. (2.256)

சர்வாதிகார சமூக அமைப்பில் தனிநபர் உரிமை என்பதே எதுவும் இல்லை. அரசுக்கு அளிக்கப்படும் வரையரையற்ற அதிகாரங்கள், மனித அடிமைத்தனத் தையும், கீழ்மையையும் உண்டாக்கும். ஒரு காலத்தில் மனிதன் மீது முழு அதிகாரம் செலுத்தும் அடிமை முறை உலகில் அமுலில் இருந்தது. இப் பொழுது அத்தகைய அடிமை முறை சட்ட பூர்வமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அடிமைத்துவத்திற்குச் சமமான தனிநபர் கட்டுப்பாடுகளை சர்வா திகார சமூக அமைப்பு விதித்துள்ளதை நாம் கண்கூடாகவே பார்க்கலாம்.



9. சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு:

சுயதீர்மான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் வலியுறுத்து கிற நேரத்தில் தனிநபரின் சமய உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும் தவறவில்லை. சமய விவகாரத்தில் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிக்கும் வகையில் எந்தச் செயலும் கூடாது. எந்தப் பேச்சும் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.



10. தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு.

வேறொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள் (16:164)



11. வாழ்வாதார அடிப்படைக்கான உரிமை:

தேவையுள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய, நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

இறைவன் கட்டளையிடுகிறான். அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கு, தேவையுள்ளோருக்கும் உரிமையுண்டு. (70:15)



12. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண, முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.




13. ஆட்சியாளர் விதிவிலக்கல்ல.

ஓர் உயர்ந்த வம்சத்து பெண் திருட்டுக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள். அந்த வழக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் முன் கொண்டுவரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். அப்பொழுது முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர், சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக்குடிமக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்க விடுவார்கள். என் உயிர் யார் கைவசம் உள்ளதோ. அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, முஹம்மதின் மகள் பாத்திமா இதே தவறை செய்தாலும் நான் அவர் கையை துண்டிக்காமல் விடமாட்டேன்.



14. அரசியன் விவகாரங்களில் கலந்து கொள்ளும் உரிமை.

அவர்கள் பணிகள் அவர்களுக்குள் கலந்தாலோசனை மூலமாகவே (நடை பெறும்) (42:38) ஆலோசனை சபை அல்லது சட்டமன்றம் என்பதன் கருத்து இதுதான். அரசின் தலைவர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக, சுயேட்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சட்டபூர்வ பாதுகாப்பினை நல்கி மேற்கூறிய மனித உரிமை களைச் சாதிப்பதில் இஸ்லாம் நாட்டம் கொண்டுள்ளது. அதுமட்டு மல்ல, மிருக இயல்புகளைவிட்டு வெளியேறி, மனிதமாண்புகளை மேற்கொள்ளவேண்டும். இரத்த பந்தம், இனமேன்மை, மொழி வெறி, பொருளாதார மேலுரிமை போன்ற குறுகிய வட்டங்களை விட்டுபரந்த நோக்கின்பால் வரவேண்டும். அந்தரங்க சக்தியோடு சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழவேண்டும் என இஸ்லாம் மனிதகுலத்திற்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக