சனி, 20 நவம்பர், 2010

குடிகார மிஷ்கினும், விபச்சாரி சாருவும்

தான் எடுத்துள்ள நந்தலாலா படம் தரமான படம் எனக்கருதுகிறாரா மிஷ்கின்...?


தினமணி இனயதளத்தில் வெளியாகியிருக்கும் அவரது கருத்தைப் படித்தவுடன் என்னசொல்வதென்று தெரியவில்லை.ஊருக்குதான் உபதேசம் என்பதுபோல் உள்ளது...

அவரது அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளார் என்று நண்பர் செந்தில் மூலம் அறிந்தேன்.உனக்கு குடிக்க தெரியுமா, புகைக்க தெரியுமா என உதவி இயக்குனராக சேர வருபவர்களிடம் கேட்க்கும் அவர் படிப்பதுண்டா, என்னென்ன படித்துள்ளீர் என்றும் கேட்பது வியப்பாக இருக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் இவர்களெல்லாம் தங்களது புத்திஜீவித்தனத்தை எப்படியெல்லாம் காட்டுகின்றனர் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

எனது ராம் திரைப்படத்தில் காதலே தேவையில்லை என்றபோதிலும் இந்த தமிழ்திரைச் சூழல் என்னை அவ்வாறு வைக்கச்செய்தது என்று இயக்குனர் அமீர் தனது கையாளாகாத்தனத்தை கூறுகிறார். இதுதான் இவர்களது பிரச்சனை அதாவது, இவர்களாகவே இவர்களை கலை இயக்குனர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவது. இந்த விஷயத்தைப் போட்டுடைத்திருப்பார் இயக்குனர் ராம்.அனைத்தும் வணிக ரீதியாகவே எடுக்கப்படுகின்றன என்றும் மேலும் சினிமா குறித்து அவரது பார்வையும் நிலைப்பையும் தெளிவுபடுத்தியிருப்பார் அதனை ஓர் தனிப் பதிவாக இடுவதே சிறப்பாக அமையும். அடுத்த பதிவில் அதை பதிக்கிறேன்.

புதன், 17 நவம்பர், 2010

இஸ்லாமிய மனித உரிமைகள்


1. உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:

இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) கூறினார்கள்:

(இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரை பறிக்கக் கூடாது.

முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.



2. மனித மாண்பின் பாதுகாப்பு:

குர்ஆன் கூறுகிறது:

i. ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.

ii. அவதூறு கற்பிக்காதீர்

iii. பட்டப்பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்.

iV. புறங்கூறாதீர், தரக்குறைவாக பேசாதீர்.




3. தனிநபர் வாழ்வும் புனிதமும்:

1. உளவு பார்க்காதீர்

2. உரியவரின் அனுமதியின்றி ஒரு வரின் வீட்டுக்குள் நுழையாதீர்

சனி, 13 ஜூன், 2009

சாலையோரக் கலைஞன்

சாலையோரக் கலைஞன்
-பற்குணன்

தனக்கு தேவையானதை வாங்க கொவ்ரவமாகவும், தன் வயிற்றைக் கழுவ வேண்டுமே என்று ஏதுமில்லாதவனாகவோ, தனக்கில்லாவிட்டாலும் தன் குழந்தைக்காவது கால்பங்கு இறைப்பை நிறம்ப வேண்டுமே என்றும், தான் எதற்காக இதை செய்கிறேன் என்றும், ஒரு வேளை நம் பரம்பரை தொழில் இதுதானோ என்றும் ஓடி விளையாடவேண்டிய குழ்ந்தை இப்படி ஓடி ஓடி மற்றவர் காலில் விழுவதையும் உள்ளத்தால் உணராவிட்டாலும் கண்களால் உண்ரும் திறன் கொண்டும் கண்டும் காணாமல் செல்வது கண்கூடே...

ஒரு வேளை அவர்கள் தனக்கு ஏதும் இல்லை , தன்னால் ஏதும் செய்ய இயலாததால், அவர்கள் கை கால் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் பிச்சை எடுக்கின்றனறே என்று சில உள்ளங்கள் மங்கும் போது அனைவரும் அப்படி அல்ல என மறுப்பு கூறுவது போல் தோற்றமளிக்கிறது அந்த ஓவியம். ஆம் பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளையும், பல வண்ணங்களையும் கொண்டு வரைந்த, வரையப்படும், வரையப்போகும் ஓவியங்களுக்கு தாய் போல் தோற்றமளிக்கிறது. உண்மைதான் ஒரு காலத்தில் சுவற்றில் வரைந்த புகழ்மிக்க எல்லோரா , அஜந்தா போன்ற குகை ஓவியங்களின் பரம்பரை தான் இந்த சாலை ஓவியம் என அந்த ஓவியம் மட்டுமல்ல் அந்த பிச்சைக்கார ஓவியர் இல்லை இல்லை கௌவ்ரவப்பிச்சை ஓவியரும் கூறுகிறார்...




ஓவியங்களை காட்சிப்படுத்தவும் , ஓவியர்களைப் பெறுமைப்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்குக்குள் அழகான பெரிய கூடம் பல தரப்பட்ட மக்கள் , தன்னால் மற்றவர்கள் போல் பணம் கொடுத்து அந்த ஓவியங்களை வாங்க முடியாது என்றாலும் அதைபார்த்து செல்லக்கூடியவர்களும் அடங்கியதாக காணப்பட்டது அந்த அறை. அவ்வளவு உயர்ந்த கலையாக கருதப்படும் ஓவியக்கலை இன்று பணக்காரர்கள் மட்டுமே அல்ல்து தன் வீட்டை உயர்த்திக்காட்டும் என்பதற்காகவோ, ஒரு வகை வியாபாரமாகிவிட்ட‌தை எண்ணி வருந்திப் பயனில்லை. ஏனெனில் இன்று கலைகள் அனைத்தும் வியாபாரமாகிப்போய் விட்டது என்பது கண்கூடே காணக்கூடியது...

சிந்தனைக்கு ஓர் கேள்வி




திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?


பதில்
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35
குறள் எண் : 341
குறள் : யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்